பல்லவராயர் அரசர்களின் வரலாறு..!
#யார்_இந்த_பல்லவராயர்கள்??? ------------------------------------------------------------------- 500 வருடங்களுக்கு மேலாக காஞ்சியில் நிலைபெற்ற பல்லவ பேரரசானது பிற்காலத்தில் சோழர்களால் வீழ்த்தப்பட்டு, ஒட்டுமொத்த நிலப்பரப்பும் சோழர் வசம் வந்தது. ஆனால் பல்லவ மரபினர்கள் சோழர்களின் ஆட்சியே ஏற்று கொண்டு அவர்களின் நிர்வாகிகளாக செயல்படுகிறார்கள். அரசர் நிலையில் இருந்த பல்லவர்கள் அரையர் (அதிகாரி) நிலைக்கு மாறுகிறார்கள். இவ்வாறு சோழர்களின் அரசவையில் ஆதிக்கம் பெற்ற தலைவர்களாக பல்லவ அரையர்கள் செயல்படுகிறார்கள். சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த பல்லவராயர்கள் பாண்டியர்களின் கூட்டணியில் இணைகிறார்கள். இப்படி சோழர் பாண்டியர்களுக்கு படைத்தலைவர்களாக செயல்பட்ட பல்லவ மரபினர்கள் இன்றும் கள்ளர் சமூகத்தவர்களாக புதுக்கோட்டையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் புகழ்பெற்ற அரசர்களாக பெருமான்நம்பி பல்லவராயர், வெங்கடாசல பல்லவராயர், சிவந்தெழுந்த பல்லவராயர் போன்றோர் சரித்திர ஏட்டில் குறிக்கப்பட்டுள்ளன. பல்லவராயரின் கடைசி மன்னராக மார்த்தாண்ட பைரவ பல்லவராய தொண்டைமான் புதுக்கோட்டையின் மன்னராக 1886 முத...