மருது பாண்டியரின் வாழ்க்கையின் இறுதி நாட்கள்...!
ஆங்கிலேயர்களுக்கு எதிரான வீர முழக்கத்தை முதலில் உரைத்தவர் வீரர் புலித்தேவன். அவரை தொடர்ந்து, திப்பு சுல்தான், கட்டபொம்மன், வீர மருது சகோதரர்கள், போன்றவர்கள்.
இதில் குறிப்பிட்டு கூறப்படவேண்டியவர்கள் மருதுபாண்டிய மன்னர்கள். பிரிட்டிஷ்காரன் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு வேட்டையாட காட்டிற்கு சென்ற சமயம், வெறும் கைகளால் புலியை நேருக்கு நேர் நின்று கொல்லும் திறன் படைத்தவர் பெரிய மருது.
பெரிய மருது மிகப்பெரிய வீரர் நாணயத்தை சாதாரணமாக கை விரல்களால் வளைக்கும் திறன் கொண்ட மாவீரர். மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்ததோடு, ஒரு அங்குல இடத்தைகூட விட்டுத்தர மறுத்தார்கள். கப்பம் எல்லாம் செலுத்தமுடியாது, வேண்டுமானால் மோதிப் பார்த்துவிடலாம் என்று எழுத்து மூலமாக ஆங்கிலேயரை போருக்கு அழைத்தவர்கள் இந்த மாவீரர்கள்.
ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதத்திற்கு முன்னாள் வேல்கம்பு, வீச்சரிவாள், மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும். ஒருவனுக்கு ஆங்கிலேயரை போருக்கு வா'' என்று கேட்க தைரியம் வேண்டும். அந்த தைரியம் தீரர் திப்புசுதானுக்கும், மருதுபாண்டிய மன்னர்களுக்கு மட்டுமே இருந்தது.
( வளரி என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவர் பெரிய மருது. தொடு வர்மக்கலையிலும் மிகப்பெரும் வல்லவராவார். பெரிய மருதுவிடம்தான் கர்னல் வெல்ஷ் என்பவர் வளரி சுற்ற தான் கற்றுக்கொண்டதாக தனது நாள் குறிப்பில் எழுதியுள்ளார். )
கட்டபொம்மன் மறைவுக்கு பின் தப்பி வந்த ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததை காரணம் காட்டி ஆங்கிலேய அரசு மருதுகளின் மீது போர் தொடுத்தது. போரின் முடிவில் மாவீரர் சின்ன மருது ஒரு மிருகத்தைபோல் வேட்டையாடப்பட்டதையும், தொடையில் காயமுற்று காலொடிந்து சிறையிலடைக்கப்பட்டதையும், கர்னல் வெல்ஷ் எனும் ஆங்கிலேய தளபதி தனது ரானுவ நினைவு குறிப்புகளில் பதிந்துள்ளார் என வரலாற்று ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ண்ன் தனது ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். 1813-ல் கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய மருதுபாண்டியர் வரலாற்றிலும் இவை பற்றி விளக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. மறைந்த வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரன் தனது மருதுபாண்டிய மன்னர்கள் நூலிலும் இதை விவரித்து எழுதி உள்ளார்.
"கிஸ்தியெல்லாம் தரமுடியாது. வேண்டுமானால் மோதிப்பார்த்து விடலாம்" என்று கூறுவதற்கு தைரியமும் ஆண்மையும் வேண்டும். அதுவும் வெள்ளையனின் அதிநவீன ஆயுதங்களுக்கு முன்பு எழுத்து மூலமாக கேட்பதற்கு தைரியம் வேண்டும். அது போன்றதொரு தைரியம் மருது சகோதரர்களுக்கு இருந்ததில் வியப்பேதும் இல்லை.
மருது பாண்டியர் வரலாற்றில் அவரின் இறுதி நாட்கள் பற்றிய தகவல் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்..! அதனை இந்த கானொளியில் பார்க்கலாம்.!
Comments
Post a Comment