உலக நாடுகளை அதிரவிட்டவர் தான் இந்த அப்துல்கலாம்....!



1989ல் சோவியத் யூனியன் சிதைந்து போக இந்தியாவின் அணுசக்தி திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு தள்ளப் பட்டன.

கல்பாக்கம் உள்பட சோவியத்தை நம்பி ஆரம்பிக்கப் பட்ட திட்டங்கள் அனைத்தும் தேங்கிப் போயின. பின்னர் ரஷ்யா கையை ஊன்றி எழுந்து நமக்கு மீண்டும் உதவ முன் வருவதற்குள் பத்து, பதினைந்து ஆண்டுகள் கரைந்தோடி விட்டன. இப்போது தான் ரஷ்யா உதவியோடு கல்பாக்கம் திட்டம் முழு வேகத்தோடு நடந்து வருகிறது.

ஆனால் ரஷ்யாவை மட்டும் நம்பியே நாம் இனியும் காலம் தள்ள முடியாது. அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியாது. காரணம், அவர்களையும் கட்டுப்படுத்தும் உலக ஒப்பத்தங்கள் தான்.

1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group.

எந்த நாடும் இந்தியாவுக்கு உரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அடங்கும்.

நம் அணு உலைகளுக்கான எரிபொருள்களைப் பெற நாம் இந்த குரூப் நாடுகளை சார்ந்து தான் இருக்க வேண்டிய நிலை. வெறும் 15 நாடுகளுடன் ஆரம்பித்த இந்த குரூப்பில் இப்போது 44 நாடுகள் உள்ளன.

ஆக இங்கேயும் நமக்கு ஆப்பு வைத்தது அமெரிக்கா தானே இப்போது அவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா என்பது இடது சாரிகளின் இன்னொரு கேள்வி.

இத்தனை தடைகள் இருந்தாலும் கூட கிடைத்த உரேனியத்தை ‘ரீ- புராசஸ்’ செய்து அதிலிருந்து அணு குண்டு தயாரிப்பதற்கான ப்ளுட்டோனியத்தை உருவாக்குவது, அணு பிளப்புக்கு (Nuclear fission) பதிலாக அணு இணைப்பைக் (Nuclear Fusion) கொண்டு டிரிடியம் (tritium) உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்குத் தேவையான கதிரியக்க தனிமங்களை பிரித்து எடுப்பது என இந்தியாவும் விடாமல் தனது முயற்சிகளை ஞதொடர்ந்தது.

காலங்கள் கடந்த பிறகும் எந்த பலனும் கிடைக்காததால் இந்தியா ஒரு அதிரடி திட்டத்திற்கு தயாரானது..

அதன் படி
மே மாதம் 1998 இல்  வாஜ்பாய் அனுமதியுடன் டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான ஒரு டீம் போக்ரானில் தனது இரகசிய வேலையே தொடங்கியது.

இம்முறை அமெரிக்கா உளவு செயற்கைக் கோல்களையே ஏமாற்றி காட்டினர்..

அப்துல் கலாமுக்குள் இருந்த அணு விஞ்ஞானம் தான் குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்ச் போர்டை ராணுவ இன்ஜினியர்களிடம்  கொடுக்க செய்தது. கலாமுக்குள் இருந்த ராக்கெட் – சாட்டிலைட் விஞ்ஞானம்  அமெரிக்கா செயற்கை கோள்களின்  சுழற்சியை கணித்து கொண்டிருந்தது.

அணு விஞ்ஞானி அப்துல்கலாம் தனது குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவர் டாக்டர்.ஆர். சிதம்பரம்.

நம் கலாமுக்கு இன்னொரு பெயர் உண்டு...'கலோனல் பிருத்விராஜ்'

பொக்ரான் அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.

இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்டனர் கலாமும்-சிதம்பரமும். இந்த குழுவில் இருந்த அனைவரும் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.

அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயரிடனர்..

இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகளுக்கும், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கும் இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.

மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.

ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரு மாத அவகாசம் தான். சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர்.

ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான். அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார்.

இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்.. அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.

கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தூக்கமில்லா இரவுகள்..

மே மாதத்தில்107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..

வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என்றார், மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.

உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனது..

இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம். இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.

அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''.

அமெரிக்காவின் கழுகு கண்களுக்கு மண்ணை தூவி அப்துல் கலாம் பொக்ரான் சோதனையே வெற்றி கரமாக முடித்தார்..

இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது.

1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம்.

2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான்.

3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.

இப்படி இந்தியாவின் சாதனையே உலக அரங்கில் தலை நிமிர வைத்தவர் தான் நம்ம அப்துல்கலாம்...

Comments