இட்லியின்_வரலாறு...! தமிழர்களின் உணவு பண்பாடு..!
உலகத்தின் சிறந்த Breakfast நம்முடைய இட்லியும் தேங்காய் சட்னியும் தான்.. இது எத்தனை பேருக்கு தெரியும்..!
1படி புழுங்கல் அரிசியுடன் கால் படி உளுந்து சேர்த்து அரைக்கப்பட்ட மாவில் இட்லி அவிக்கிறோம்..
உளுந்து எனும் அரிய தானிய வகையின் தாயகம் இந்தியா. குறிப்பாக தமிழகத்தின் தஞ்சை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாக விளைவிக்கப்படும் தானியம் இது..
உழுந்தைப் பற்றிய குறிப்புக்கள் அகநாறு, புறப்பாடல், முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. சங்கத்தமிழ் இலக்கியங்களுக்கு இணையான வாழ்வியல் கொண்ட பிறமொழி இந்திய இலக்கியங்கள் எதுவும் இல்லாத நிலையில், உழுந்தையும் – அரிசியையும் சேர்த்து அவக்கின்ற இட்லியை கண்டுபிடித்த பெருமை தமிழனையே சாரும். உரலில் இடித்த அரிசிமாவினை கொண்டு, அப்பம், பனையோலை, பூவரசு இலைக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை ஆகியவற்றை கண்டறிந்த தமிழன், அதன் தொடர்ச்சியாகவே இட்லியைக் கண்டறிந்தான் என்று தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வு செய்துவரும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இட்லியின் ஆரம்ப பெயர் : 'இட்டரிக' என்று ஏழாம் நூற்றாண்டிலும் 'இட்டு அவி' என்று 12 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட நிலையில் பின்பு 'இட்டு அவி' என்ற இரட்டைச் சொல் மருவி 'இட்டலி' என்ற ஒரு சொல்லாய் திரிந்து அதன் பின்னர் 'இட்லி' என்று ஆனதாகக் தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். முதலில் உருண்டை வடிவிலான இட்டலிகளே இருந்திருக்க வேண்டும் என்றும், பின்னர் உருண்டை வடிவிலான இட்லிகளின் மேல் பகுதிகள் மென்மையாகவும், நடுப்பகுதி கடினமாகவும் இருக்கக் கண்டு, பிறகு தட்டை வடிவில் அவிக்க தமிழர்கள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்..
இட்லியின் வரலாறு தமிழர்களின் உணவுப் பண்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிற இன்றைய நிலையில் இட்லிக்கு பெயர்பெற்ற ஊராக விளங்குகிறது தமிழகத்தின் மதுரை. மதுரை இட்லியைப் போலவே, செட்டிநாடு இட்லி, தஞ்சாவூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி ஆகியன பிரபலமாக இருக்கின்றன. அதேபோல அரிசி மா இல்லாமல் ரவை மாவில் உளுந்து மா கலந்து செய்யப்படும் ரவை இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி என்று புதிது புதிதாக தமிழன் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தினாலும் அரிசிமாவும் உழுந்து மாவும் கலந்து அவிக்கப்படும் இட்லியுடன் சாம்பார், தேங்காய் சட்னி, காரச் சட்னி சேர்த்து சாப்பிடும் சுவைக்கு பிட்சாவோ, பர்கரோ கூட ஈடாக முடியாது... இட்லிபோடி சேர்த்து சாப்பிடும் பழக்கம் பல வீடுகளில் பிரபலமாக இருக்கும்..
மென்மையான எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது இட்லி. 75 கிராம் எடை கொண்ட 4 இட்லிகளோ அல்லது 50 கிராம் எடைகொண்ட 6 இட்லிகள் சாப்பிடுவதால் அமினோ அமிலங்களும் பன்மடங்கு அதிகரிக்கின்றன. இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது. ஆனால் இரவு நேரத்தில் 4 இட்லி மட்டும் சாப்பிடுவது நல்லது...

Comments
Post a Comment