முருகன் கோவிலில் எளிமையாக நிகழ்ந்த பிரபாகரனின் திருமணம்...!
ஈராயிரம் ஆண்டுகளாக ஈழத்தில் வாழ்ந்து வந்த தமிழ் இன மக்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பாடு ஏற்பட்ட சிங்கள தேசியவாத எழுச்சியின் விளைவாக ஒடுக்கப்பட்டு, உயிரும் உடமைகளும் பறிக்கப்பட்டு சொல்லமுடியாத துயருக்கு ஆளாகியிருந்த போது தமிழினத்தின் அடையாளத்தையே முழுமையாக மாறிய பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
.
தன் அக்காள் கல்யாணத்திற்கு போடப்பட்ட மோதிரத்தை விற்று துப்பாக்கி வாங்கிய பிரபாகரன் தான் பின்னாளில் முப்படைகளையும் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த இயக்கத்தின் தலைவராக உருவெடுத்தார். தங்கதுரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து இயக்கத்தை ஆரம்பித்த காலத்தில் இருந்து புகை, மது, மாது போன்றவை கூடாது, போராளிகள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பது போன்ற கொள்கைகளை கடுமையாக பின்பற்றி வந்த பிரபாகரனது வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அவரது திருமணம்.
.
1983 ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு கருப்பு ஆண்டு. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவின் முழு ஆதரவுடன் தமிழர்களுக்கு கலவரங்கள் முடுக்கி விடப்பட்டன. கண்ணில் கண்ட தமிழர்களை எல்லாம் அடித்து, உயிரோடு எரித்து வெறியாட்டம் ஆடினார் சிங்களர். இந்த சமயத்தில் பிரபாகரனும் சிங்கள அரசுக்கு எதிராக தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திகொண்டிருந்த வேளையில் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தனர் அங்கு பயிலும் நான்கு மாணவிகள். சிங்கள அரசாங்கத்திடம் உண்ணாவிரதத்தின் மூலம் தீர்வு ஏதும் கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்திருந்த பிரபாகரன் நான்கு பெண்களையும் உண்ணாவிரதத்தை கைவிட்டு பிற வழிகளில் போராடுங்கள் என்றார். இந்த நான்கு பெண்களில் ஒருவர் தான் மதிவதனி.
.
தகித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்ந்த பிரபாகரன் பெண்கள் நால்வரையும் ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கத்தின் பாதுகாப்பில் சென்னைக்கு அனுப்பிவைத்தார். பின்னாளில் பிரபாகரனும் பல விடுதலைப்புலிகளும் சென்னைக்கு பயிற்சிக்காக வந்தனர். ஒருநாள் யதேர்சையாக அடேல் பாலசிங்கத்திடம் சொன்னார் நான் மதிவதனியை விரும்புகிறேன் என்று.
.
பிரபாகரன் திருமணம் செய்துகொள்வதில் இயக்கத்தில் பலருக்கு முரண்பாடான கருத்துக்கள் இருந்தன. அவர்கள் எல்லோரையும் சமாதனம் செய்து இயக்கத்தில் இருப்பவர்கள் தாகத உறவு வைத்துக் கொள்ளக் கூடாதே தவிர திருமணம் செய்துகொள்ளலாம் என்று இயக்கத்தின் விதிகள் மாற்றப்பட்டு ஒருவழியாக திருமணம் நிச்சயம் ஆனது. சென்னையிலேயே திருமணம் செய்துகொள்வது என்று முடிவானது. சரி, எந்த கோயிலில் பிரபாகரனது திருமணம் நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?.
.
திருப்போரூரில் இருக்கும் முருகன் கோயிலில் மிக எளிமையான முறையில் பிரபாகரன்-மதிவதனி ஆகியோரது திருமணம் நடைபெற்றது. இந்த சமயத்தில் பிரபாகரனது பெற்றோர் தமிழகத்தில் தான் இருந்தார்கள் என்றாலும் திருமணத்திற்கு வர மறுத்துவிட்டனராம். பிரபாகரனுக்கு மாப்பிள்ளை துணையாக இருந்தவர் சிங்கள அரசின் பிடியில் இருக்கும் செல்வராசா பத்மநாபன் ஆவர்.

Comments
Post a Comment