தமிழன் பண்பாடும் மாட்டு இறைச்சியும்..!
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்..
தமிழன் ஆதியில் காட்டுமிராண்டியாக இருந்த காலத்திலிருந்தே விலங்கு இறைச்சி உண்டு வந்தவன். தனது நாகரிக வளர்ச்சியில் எது சரி தவறு என்று உணர்ந்து.. சைவத்தை கடைபிடித்தான்.. எல்லா உயிர்களை மதித்து வாழ்ந்தான்.. இது மனித இனத்தின் போற்ற தக்க அறிவு..
ஆனால் இப்பொழுது மனித இனம் பின்னோக்கி நகர்கிறது.. அன்று மாட்டை போற்றி வளர்த்த தமிழன் இன்று வறுமையில் அதனை விற்கிறான்.. மற்றவன் ரூசியால் அதன் இறைச்சியே திண்கின்றான்..
(மாட்டிறைச்சி சாப்பிடுவதால் உடலுக்கு கேடு உள்ளது)
(மாட்டிறைச்சி சாப்பிடுவதால் உடலுக்கு கேடு உள்ளது)
இன்று தமிழகத்தில் ஆடு கோழி மீன் அத்தியாவாசிய இறைச்சி ஆகிவிட்டது.. மாடு இறைச்சி மட்டும் தான் சிலர் மட்டும் உண்ணும் உணவாக உள்ளது.. இன்னும் சில வருடங்களில் மாட்டிறைச்சியும் அத்தியாவாசிய உணவாக மாறும் அவலம் தமிழினத்தில் நடைபெறபோகிறது..
மாட்டை கொல்ல கூடாது என்று சொன்னால் அதற்கு இந்து மத சாயல் பூசுகிறார்கள்.. முஸ்லீம் விரோத போக்கு என்ற பேச்சு வருகிறது.. மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஏன் ஆடு கோழிகளுக்கு குரல் கொடுக்க மறுக்கிறீர்கள் என்கிற கேள்வியும் நியாயமாக உள்ளது... மாடுகள் ஒரு தனித்துவம் பயன்கள் கொண்ட விலங்கு. அதனை எவ்வித உயிர்களுடன் ஒப்பிடுவது முட்டாள்தனம்..
சற்று சுயநலமாக யோசிப்போம்..!
ஒரு உயிரானது வாழ்வதற்கு ஓர் உயிரை சார்ந்து உள்ளது.. இதனை எவரும் மறுக்க முடியாது..
ஆடு கோழி களால் இந்த நிலத்துக்கும் விவசாயத்துக்கும் எவ்வித பயன்கள் இல்லை.. இவை இறைச்சிக்காக மட்டுமே.. ஆனால் மாடுகள் மூலமாக மனித இனத்துக்கு கிடைக்கும் பயன் என்பது மிகப்பெரியது.. மாட்டை ஆட்டுடன் ஒப்பிட முடியாது..
பாரம்பரிய மாட்டினத்தை இறைச்சிக்காக உண்ணுவதால் அந்த இனம் அழிந்துவிடும்..
பால் தேவைக்காக மரபணு மாற்றதால் புதிய மாடு இனத்தை உருவாக்கி உலகமே பாலை பூர்த்தி செய்கிறது..
அதை போல மரபணு மற்ற பட்ட புதிய மாடுகளை உருவாக்கி மாட்டு இறைச்சியே ஏன் பூர்த்தி செய்ய கூடாது??????
நமக்கு உழவுக்கு பயன்பட்டு ஆதியிலிருந்து நம்முடன் இருப்பதால் தான்.. அந்த இனத்திற்கு நன்றி செலுத்தும் உயர் பண்பாட்டால் மாட்டு பொங்கல் ஏறுதழுவுதல் போன்ற விழாக்களை நம் தமிழ் முன்னோர்கள் வகுத்தனர்.. தமிழர்கள் மாட்டிறைச்சி உண்டதாக வரலாற்றில் ஒரு இடத்தில் கூட இடம் பெறவில்லை.. ஆனால் இன்று ருசிக்காக??
உலகில் எல்லாத மத நூல்களிலும் மாடுகளை உணவுக்காக கொல்லலாம் என்று சொல்ல வில்லை..
ஆதி காலத்திலிருந்து தழைத்தோங்கிய விவசாய குடி சிறப்பாக வாழ்ந்தனர்..
ஆனால் 19ம் நூற்றாண்டிலிருந்து மாடுகளை புறந்தள்ளி
டிராக்டர், இரசாயன உரம் என விவசாயிகள் மாறியதால் இன்று கடனாளியாக தற்கொலை செய்கிறான்..
ஆனால் 19ம் நூற்றாண்டிலிருந்து மாடுகளை புறந்தள்ளி
டிராக்டர், இரசாயன உரம் என விவசாயிகள் மாறியதால் இன்று கடனாளியாக தற்கொலை செய்கிறான்..
இதற்கு ஒரே காரணம் தான் நம்முடன் பல ஆயிரம் ஆண்டுகள் மேலாக பயணித்த மாட்டு இனத்தை புறந்தள்ளியதால் தான்..
மாடுகள் என்கிற உயிரினம் உலகில் இல்லை என்றால் அன்றை ஆதி மனிதர்கள் எப்படி விவசாயம் செய்து இருப்பார்கள்..
உணவு போடும் விவாசாயிகளை கடவுளாக போற்றும் நாம்.. விவாசாயிகள் கடவுளாக நினைக்கும் மாடுகளை திண்பதற்கு ஏன் துடிக்கிறோம்..
பசு மாடு வளர்ப்பவர்களுக்கு இது தெரியும்..!
கன்று பால் குடிக்கும் போது சிறிது நேரத்திற்கு பிறகு மாடு கன்றுகுட்டியே விரட்டும்.. ஏன் என்றால் நம்மை வாழ வைக்கும் மனிதர்களுக்கு பால் பற்றாமல் போய் விடுமோ என்ற உணர்வில் தான் அப்படி செய்யும்.. தாய்க்கு இனையான உணர்வு உள்ளதால் தான் பசுவை தெய்வமாக தமிழ்மக்கள் போற்றுகின்றன..
மாடுகள் இல்லையேனில் விவசாயிகள் இல்லை..!
விவசாயிகள் இல்லையேனில் நாம் இல்லை..!
விவசாயிகள் இல்லையேனில் நாம் இல்லை..!
இன்று அதே மாடுகளை அழிக்கும் நோக்கமாக மாட்டிறைச்சி கலாச்சாரம் நாட்டில் பெருகுகிறது..
இன்று நாட்டில் மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை என்பது வெறும் இரட்டை வேடமே.. இதில் உள்நோக்கம் உள்ளது..
ஆங்கிலேய காலத்தில் தொடங்கிய பசு வதை கூடத்தையும், மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களையும் ஒழித்தாலே போதும்...
ஆனால் இன்றை நாடக தடை மூலமாக அரசியல் சதுரங்கம் விளையாடுகிறார்கள்...
ஒருவரின் உணவு சுதந்திரத்தில் அரசு எக்காரணத்தில் கொண்டும் தலையிட கூடாது... ஆனால் ஒரு இனம் அழிவை தடுக்க அந்த அரசு தலையிடலாம்...
இச்சட்டம் மாடுகளின் உயிரை ஒரளவு காப்பாற்றி உள்ளது.. தவிர மக்கள் மனநிலையே மாற்ற வில்லை..
ஒருவரின் உணவு சுதந்திரம் பறிக்கப்படுவதை விட ஒரு இனத்தின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதே சிறந்தது...
நன்றிக்கடனுக்காக
நாம் மாடுகளை ஒவ்வொருத்தரும் வீட்டில் வளர்ப்பது என்பது இயலாத காரியம்..
நாம் மாடுகளை ஒவ்வொருத்தரும் வீட்டில் வளர்ப்பது என்பது இயலாத காரியம்..
ஆனால் மாட்டிறைச்சி உண்ணாமல் இருக்க முடியும்... மாட்டின் தோலினால் பயன்படுத்தப்படும் பொருள்களை புறந்தள்ள முடியும்... பாக்கெட் பாலை தவிர்க்க முடியும்...
முடிந்த நன்றி கடனை செய்வோம்...
(இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தின் பதிவு இல்லை)
ஆக்கம்
அஜித்குமார்
அஜித்குமார்
Comments
Post a Comment