உலகை பாதுகாக்கும் வேற்றுகிரகவாசிகள்..!

நடக்கஇருந்த_உலக_யுத்ததை_தடுத்து_நிறுத்திய_வேற்றுகிரவாசிகள்..!

(நிலவுக்கு சென்ற மனிதரின் அதிர்ச்சி தகவல்)

பூமியில் நடக்க இருந்த மிகப்பெரிய அணு ஆயுத அழிவு வேற்றுக்கிரகவாசிகள் மூலம் தடுக்கப்பட்டது என எட்கர் மிட்செல் (Edgar Mitchell) தெரிவித்திருந்தார்.

எட்கர் மிட்செல் நிலவில் கால் பதித்த ஆறாவது நபரும், விஞ்ஞானியும் ஆய்வாளரும் ஆவார். எனினும் அவர் இந்தத் தகவலை வெளியிட்ட சில நாட்களிலேயே மரணமடைந்தார்.
1971ஆம் ஆண்டு அப்பலோ 14 நிலவுப் பயணத்திட்டத்தில் கலந்து கொண்ட இவர் நிலவின் மேற்தளத்தில் 9 மணித்தியாலயங்களைக் கழித்தவர்.



நாசாவில் பணியாற்றிய மிட்செல் நிலவுப்பயணத்தின் பின்னர் விண்வெளி ஆய்வுகள் மற்றும் வேற்றுக்கிரகங்கள் தொடர்பிலான பலவேறு விதமான ஆய்வுகளையும் மேற்கொண்டு வந்தார்.
எட்கர் மிட்செல் தனது ஓய்வின் பின்னர் கடந்த வருடம், ரஷ்யா மற்றும் அமெரிக்கா, வடகொரியா போன்ற நாடுகள் இடையே நடைபெற இருந்த அணு ஆயுதப்போரினை வேற்றுக்கிரகவாசிகளே தடுத்தனர் எனத் தெரிவித்தார்.
மேலும் ஆங்கில ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய செவ்வியில் கூறியதாவது,
இந்த நாடுகளுக்கு இடையே பனிப்போர் வலுப்பெற்றபோது அமெரிக்க இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு போர் பற்றி வினவியிருந்தேன்.
அப்போது அவர்கள் பசுபிக் பிராந்தியத்தில் தாம் ஏவுகணைப் பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தபோது, இனந்தெரியாத விண்கலங்கள் அவற்றினை தாக்கி அழித்தன எனவும் தெரிவித்தனர்.
மேலும் பென்டகனில் கடமையாற்றி வரும் உயர் இராணுவ அதிகாரியும் இதனை உறுதி செய்தார். ஆனால் அவர் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.
பூமிக்கு ஏற்பட இருந்த மிகப்பெரிய அழிவினை வேற்றுக்கிரகவாசிகளே தடுத்தனர். அவர்கள் பூமியை அவதானித்தவாரே இருக்கின்றனர். நிலவுப் பயணத்தின் போதே இதனை அறிந்து கொண்டேன்.அவர்கள் அடிக்கடி பூமிக்கும் வருகின்றார்கள் என்பதும் உறுதி.
அதேபோல் அமெரிக்க ரஷ்ய ஆயுத களஞ்சியங்களுக்கு மேல் யூ. எப். ஓ எனப்படும் பறக்கும் பொருட்கள் (Unidentified flying object) அடிக்கடி அவதானிக்கப்பட்டமைக்கும் இதுவே காரணம் எனவும் எட்கர் மிட்செல் தெரிவித்திருந்தார்.
எனினும் இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டதன் பின்னர் சில நாட்களிலேயே (2016.02.04) மரணமடைந்தார்.
அமெரிக்க இராணுவ மற்றும், நாசாவின் சட்ட விதிமுறைகளுக்கு அமைய அதன் ஆய்வு இரகசியங்களை வெளியிடுவது சட்ட விரோதக் குற்றமாகும்.
அதன் அடிப்படையில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஒரு சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவர் கூறிய தகவல்கள் இன்று வரை நாசாவும், அமெரிக்காவும் மறுத்து வருவதோடு, தெளிவாக பதில் கூறவும் மறுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Comments