கள்ளர் குல மன்னர் சிவந்தெழுந்த பல்லவராயர்...!

********கள்ளர் குல மன்னர்********
***சிவந்தெழுந்த பல்லவராயர்***


 கள்ளர்குல சிவந்தெழுந்த பல்லவராயர் இன்றைய புதுக்கோட்டை மாகாணத்தின் சோனாடு,கோனாடு,கபிலை நாடு,பெருவாசல் நாடு,பைங்காட்டு நாடு,குளமங்கல நாடு போண்ற பகுதிகளை #புலிக்கொடி தாங்கி ஆட்சி செய்த மன்னர்

தென்னாடுடைய சிவனை நாயன்மார்களைப் போல் ஒவ்வொரு நொடியும் நாவிலும்,மனதிலும் உச்சரிக்கும் சிவபெருமான் மேல் தீராத தாகம் கொண்ட தீவிர சிவபக்தர், இவரின் சிவ பக்தியை மெச்சி இவர் மீது ஒரு 😇உலாவே பாடப்பட்டுள்ளது.

#கண்டதேவி சொர்ணமூர்த்தீர்ஸ்வரர் கோவிலில் தனது பொற்கையாலே சிவபெருமானை தினம்தோரும் பூஜிக்கும் சிவதொண்டர்

சரி வரலாற்று நிகழ்வுக்கு வருவோம் கள்ளர் குல மன்னர் சிவந்தெழுந்த பல்லவராயருக்கு #கிபி1686 ஆம் வருடம் போதாத காலம் ஆம் முற்பிறவியில் அவரின் பாவக்கணக்கை சிவபெருமான் முடித்து வைத்து பல்லவராயரை தனது சிவலோகத்தில் தனது அருகே வைத்துக்கொண்டார்.

ஆம் கிபி1686 ஆண்டு சேது சீமையில் #மாமறவர் #மன்னர் #கிழவன் #சேதுபதி அரியணை ஏறி 7வது ஆண்டில் அவரது #கள்ளர்குல #தளபதியான #இளந்தாரி #முத்து #விஜய #அம்பலத்திற்கு சிவந்தெழுந்த பல்லவராயரின் மீது என்ன விரோதமோ அவருக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை தீட்டினார்

#இதை #ஒரு #உரையாடலாக #பதிவிடுகிறேன்

கள்ளர் தளபதி: மன்னா நம்முடைய     இராஜியத்திற்கு கட்டுப்படாத ஒருவர் பன் நெடுங்காலமாக ஆட்சி புரிகிறார்.

மாமறவர் சேதுபதி: அப்படியா அம்பலம் யார் அவர் எந்த நாட்டுக்காரர்...?

கள்ளர் தளபதி: புலிக்கொடி தாங்கி கேரளசிங்க நாட்டின் தெற்கு வெள்ளாறு பகுதியை ஆட்சி செய்யும் கள்ளர் குல மன்னர் சிவந்தெழுந்த பல்லவராயர்

மாமறவர் சேதுபதி: இப்போது அதெற்கென்ன அம்பலம்....?

கள்ளர் தளபதி: இல்லை மன்னா அதை உங்களது மைத்துனரான விஜய ரெகு நாத தொண்டைமானின் ஆட்சிப்பகுதியுடன் சேர்த்தால் பெரும் மாகாணாமாக ஆகப்பெரும்.

மாமறவர் சேதுபதி: இப்போது பல்லவராயர் எங்கே உள்ளார்..?

கள்ளர் தளபதி: கண்டதேவி நாட்டில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ளார்.

மாமறவர் சேதுபதி: சரி அம்பலம் உடனடியாக அவரை வந்து என்னை காளையார் கோவிலில் வந்து பார்க்கச் சொல்

கள்ளர் தளபதி: ஆகட்டும் மன்னா

இப்படி மாமறவர் சேதுபதியிடம் கள்ளர் தளபதி இளந்தாரி அம்பலம் ஓலையைப் பெற்று கண்ட தேவியை அடைந்து சிவந்தெழுந்த பல்லவராயரை சந்திக்கிறார்

கள்ளர் தளபதி: சிவந்தெழிந்த பல்லவராயரே உங்களை மன்னர் சேதுபதி சந்திக்க விருப்பப்பட்டுள்ளார்

கள்ளர் மன்னர்: நன்று யாம் இப்போது சிவ பூஜையில் உள்ளேன், முடிந்ததும் வருகிறேன்

கள்ளர் தளபதி: இல்லை உடனடியாக வர உத்தரவு மீறினால் ஆபத்துக்ளாவீர்கள்

கள்ளர் மன்னர்: மூவுலகத்தை ஆளும் எம்பெருமானை பூஜித்துக்கொண்டிருக்கிறேன்,
என்னால் பாதியில் விட்டுவரமுடியாது, உங்கள் மன்னரிடம் சொல்லி புரிய வையுங்கள்

கள்ளர் தளபதி: மாமறவரை நீங்கள் அவமானப்படுத்துகிறீர்கள், உங்கள் முடிவு எங்கள் கையிலே.

கள்ளர் மன்னர்: அனைவரின் முடிவும் சிவன் கையிலே, நீங்கள் செல்லலாம்

இதன் பின்னர் கள்ளர் தளபதி மாமறவர் சேதுபதியிடம் சென்று மன்னா பல்லவராயர் உங்களை சந்திக்க மறுத்து அவமானப்படுத்திவிட்டர் என #தவறான #தகவலை அளிக்கிறார்

இதனை கேட்டு சினம் அடைந்த சேதுபதி தனது இளவரசனான மகனுடன் யானைப்படையுடன் ஒரு பெரும் படையை அனுப்புகிறார்

சேதுபதியின் இளவரசன் தலைமையிலான பெரும்படை கண்டதேவிக்கு வந்து அங்கே சிவ பூஜையில் இருந்த கள்ளர் குல மன்னர் சிவந்தெழுந்த பல்லவராயரை

கண்டதேவி குளத்தின் அருகிலே சிவந்தெழுந்த பல்லவராயரின் #மரணத்தை😓 ஏற்படுத்துகிறார் இளைய மாமறவ சேதுபதி,

சிவ பூஜையிலே #சிவலோக #பதிவி🧘🏻‍♂️ அடைந்தார் கள்ளர் குலத் திலகம் மன்னர் சிவந்தெழுந்த பல்லவராயர் அவரின் மரணத்தை தொடர்ந்து அவர்தம் மனைவி,குழந்தைகள் #தீப்பாய்ந்து 😓இறந்துவிடுகிறார்கள்

இந்த துர்சம்பவத்திற்கு பின்பு சிவந்தெழுந்த பல்லவராயரின் இரண்டு கள்ளர் விசுவாசிகள் மாமறவர் சேதுபதியின் #இளவரசனை குத்திக் கொண்றுவிட்டு பட்டத்து யானையும் கவர்ந்து தங்கள் மன்னர் இறப்பிற்கு பழி தீர்த்துக்கொள்கின்றனர்.

பல்லவராயர் இறப்பிற்கு பிறகு அவரின் ஆட்சிப்பகுதியை இளந்தாரி அம்பலம் வரையறுத்து அங்கு அதே கள்ளர் குல மன்னரான விஜயரகு நாத தொண்டைமானரை அமர வைக்கிறார். பிற்காலங்களில் தொண்டைமானார் பல்லவராயரின் வகையறாக்களிடம் #பெண் எடுத்துக்கொள்கிறார், இன்றும் பெருங்களூரில் பல்லவராயரின் வகையராக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த வரலாற்று சம்பவங்களை இந்திய அரசு ஆவணமாக வெளியிட்டுள்ளது

நான் கண்டதேவி கோவிலுக்கும்,அந்த உள்ள குளத்திலும்  பலமுறை சென்று குளித்துள்ளேன்.  ஆனால் இந்த வரலாறு எனக்கு அப்போது தெரியவில்லை, இப்போது தெரிந்ததால் கூட  நான் இதை எண்ணி அழக்கூடாது என்பதற்காக எண்ணவோ, குளத்திலே அவர் மரணித்துள்ளதால் என் கண்ணீர் நீரில் கரைந்துவிடும்

கண்டதேவி முதல் மரியாதைக்காரர் என் மாமாவிடம் இந்த வரலாறை சொன்னவுடன் அவர் கண்ணீரில் நனைந்தார், பின்பு கள்ள்ளர் குல மன்னர் சிவந்தெழுந்த பல்லவராயருக்கு கண்டதேவியில் கோவில் கட்ட வேண்டும் மாப்பிள்ளை என்றார்

ஆம் ஒரு சிவபக்தராக இறந்துள்ளதால் அவருக்கு கோவில் கட்டி வழிபடுவதுதான் நம் மரபு.

அதற்குண்டான முயற்சியில் உள்ளேன்.........

நன்றி
GAZETTEER OF INDIA TAMILNADU PUDUKOTTAI BY AN INDIAN GOVERNMENT
சிவந்தெழுந்த பல்லவராயர் உலா

அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு





Comments

Post a Comment